சற்று முன்: பிரபல இசையமைப்பாளர் மரணம்..!! மகள் இறந்த ஒரே வாரத்தில் உயிர் பிரிந்த சோகம்.. வைரலாகும் பதிவுகள்

கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கிய பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலாபாஸ்கர் இன்று காலை உயிரிழந்தார்.பாலபாஸ்கர் கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுத்திரும்பும் போது பள்ளிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலாபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலாபாஸ்கரின் குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் குணமடைந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலாபாஸ்கர் இன்று காலை சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.நீங்கள் மறைந்தாலும் உங்கள் இசை எப்போதும் எங்களை விட்டு மறையாது என்றும் வயலின் இல்லாமல் பாலாபாஸ்கர் இல்லை.

உங்களை அதிகமாக மிஸ் செய்ய போகிறோம் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அவர் இசையமைத்த பாடல், வயலின் நிகழ்ச்சி வீடியோக்கள் ஆகியவைகளும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர்.