சற்று முன் வெளியான சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தின் டீஸர் இதோ

டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் பிறந்த நாள் பரிசாக பேட்ட படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்தனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் பேட்ட படத்தின் இசை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. குறிப்பாக மரணமாஸ் பாடல் யூடியூபில் வைரல் ஹிட்டானது. தற்போது இணையத்தில் வைரலாகிவரும் அந்த படத்தின் டீஸர் இதோ