சவக்குழியில் இருந்து திடீரென கைகளை நீட்டிய பெண் சடலம்..! அஞ்சி ஓடியவர்களுக்கு கணவன் கொடுத்த ஷாக் தகவல்! பதற வைக்கும் சம்பவம்!

கோவா மாநிலம் கோவா பகுதியில் நீர்ப்பாசனத் திட்டத்திற்காக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு இடத்தில் பள்ளம் தோண்டும்போது ஒருவர் ஒடிவந்து இங்கே தோண்ட வேண்டாம் என்று கெஞ்சினார். ஆனால் ஏன் என கூறவில்லை. இதனால் மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது திடீரென ஒரு பெண்ணின் சடலம் தட்டுப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டர். அந்த பெண்ணின் பெயர் தான்வி என்றும் அவரை புதைத்தது அவரது கணவர் துக்காராம் என்பதையும் கண்டுபிடித்தனர்.

கோவா பகுதியில் வசித்து வந்த துக்காராம் கூலித் தொழில் செய்து வந்தார். நோய்வாய்ப்பட்ட மனைவியை வைத்தக்கொண்டு, 14 வயத மகளையும் கவனித்துக் கொள்ளமுடியாமல் குறைந்த கூலி வாங்கும் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க தொடர்ந்து கையில் பணம் இல்லை. ஏற்கனவே சாப்பிடுவதற்கும் வழியில்லாமல் இருந்த துக்காராம் மனைவியையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதற்கிடையே மனைவியை தீர்த்துக்கட்டினால்

மட்டுமே இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியும் என நினைத்து அவரை அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழிதோண்டி கனத்த இதயத்துடன் மனைவியை மண்ணில் புதைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை இப்படி செய்தது தெரியவந்துள்ளது. துக்காராமின் மனைவி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து துக்காராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.