சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்.. திருப்பதியில் ரஜினி குடும்பம்! வேகமாக பரவும் வீடியோ உள்ளெ

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை சென்ற வருடம் விவாகரத்து செய்தார். அதன்பின் அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு வீட்டில் தனியாக குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேத் என்று பெயரிட்டனர்.

இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர்.பின் பிரபல தொழிலதிபரின் மகன் விஷாகன் வணங்காமுடி என்பவரை சௌந்தர்யா காதலித்து வந்தார்.

இரு வீட்டிலும் பேச்சுவார்த்தை முடிந்து தற்போது அவர்களது திருமண பத்திரிகை தற்போது தயாராகியுள்ளது.அதை திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று ஏழுமலையான் முன் வைத்து பூஜை செய்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது அவர்கள் திருப்பதியில் தரிசனம் செய்த வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது அந்த வீடியோ இதோ