சுதந்திரம் தன்னை ஒரு நாள் காண வரும் என்ற எதிர்பார்ப்பில் நடிகை கீதா ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது பிரபல நடிகையான கீதா என்பவர் சென்ற ஆண்டு சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து பிறந்து இரண்டு மணி நேரங்களே ஆன தொப்புள்கொடி உடன் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்தார். பின் தனது மகளுக்கு திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தினால் அவரே அக்குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டார்.

ஆனால் இதற்கு இந்திய சட்டம் இடம் அளிக்காத காரணத்தினால் அரசின் கண்பார்வைக்கு முன்னே குழந்தை காப்பகத்தில் பத்திரமாக குழந்தையை ஒப்படைத்தார். அதற்கு முன்பாக அவள் ஆசையுடன் வளர்க்கலாம் என்று நினைத்த குழந்தைக்கு சுதந்திரம் என்ற பெயரையும் சூட்டினார். பின் அடிக்கடி அக்குழந்தையை சந்தித்து கொஞ்சி விளையாடி வந்துள்ளார்.

இவரது சேவையை பாராட்டும் விதமாக எந்த அரசு மருத்துவமனையில் அந்த பச்சிளம் குழந்தை பிறந்ததோ அதே இடத்தில் அவருக்கு அரசு வேலையை தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
பின் சுதந்திரம் வேறு ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் கடந்துவிட்டது. இந்நிலையில் என்றேனும் ஒருநாள் சுதந்திரம் தன்னை காண வருவாள் என்று நடிகை கீதா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
