தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட்டான விசயம் சின்மயி சொல்லி வரும் பாலியல் சர்ச்சைகளே. கடந்த திங்கள் கிழமை முதல் இதுகுறித்த அடுத்தடுத்த பதிவுகள் இடம் பெற்று வருகிறது.இதில் கவிஞர் வைரமுத்து சிக்கியுள்ளார். இந்நிலையில் சின்மயிக்கு ஒரு புறம் ஆதரவுகளும் பெருகி வருகிறது. தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் என பிரபலங்கள் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்துக்கு சென்ற இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்திற்கான ஆதாரங்களை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.இதற்கு சமந்தா ஒரு டுவிட் போட்டுள்ளார் அதில்,சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! #istandwithchinmayi என்று தெரிவித்துள்ளார்.பயம் சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் சின்மயி பேச வேண்டும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியதை பார்த்த சமந்தா பதில் அளித்துள்ளார்.
அவர் தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது,ஏனென்றால் நாங்கள் பயந்துவிட்டோம். இது எங்களின் தவறு என்று நீங்கள் ஆக்கிவிடுவீர்கள் என்று. சின்மயி என் சகாக்கள் எனக்காக பேச பயப்படுகிறார்கள்.
அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன். எப்பொழுது பேச வேண்டும் இல்லை பேசாமல் இருப்பது என்பது அவர்களுடன் விருப்பம் என்று சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Dear @23_rahulr and @Chinmayi I know the both of you for ten years now . I don’t know two more brutally honest people .It is this attribute of yours that I value most in our friendship . I love you with all my heart and what you say is the TRUTH !! #istandwithchinmayi
— Samantha Akkineni (@Samanthaprabhu2) 10 October 2018