சீரியலில் யாராலும் மறக்க முடியாத வில்லி தேவி ப்ரியா !! நிஜத்தில் இவர் எப்படிப்பட்டவர்ன்னு பாருங்க !!

90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் அனைவருக்கும் இவரை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் தேவிப்ரியா.இவர் நடிக்கும் போது இவரின் கதாபாத்திரத்தை இயல்பாக நடித்து காட்டுவார். பிரபல சன் ரிவியில் ஒளிப்பரப்பான சக்தி தொடரின் மூலம் தான் தேவிப்ரியா அறிமுகமானார்.


தேவிப்ரியா சீரியலில் தன் நடிப்பை நன்கு வெளிப்படுத்தியதால், இவருக்கு பல வாய்ப்புகள் வந்து குவிந்தன. சிறு வயதில் இருந்தே இவர் பெண் பொலிஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு பலனாக இயக்குநர் பாரதிராஜா சீரியலில் பெண் பொலிஸ் அதிகாரியாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். பொதுவாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த தேவி ப்ரியா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்று தன் திறமையை நிரூபித்தார்.

அதன் பின்னர் ஒரு கட்டம் முன்னேறி, தமிழ் சினிமாவில், ஊரு விட்டு ஊரு வந்து, வாலி, வல்லமை தாராயோ, மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் பல பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர், ஷீட்டிங் இல்லாத நாட்களில் வித விதமாக சமைப்பது தான் தேவி ப்ரியாவின் பொழுதுபோக்கு. வெளியில் சாப்பிடுவது என்றால், ராஜஸ்தானி உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்