சுந்தரத்தை நேரில் பார்த்த அபிராமி! என்ன செய்தார் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் முகநூல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முகநூல் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம்.இதனால், நன்மை எவ்வளவு இருக்கிறதோ அதை விட பன்மடங்கு அதிகமாக தீமையும் இருக்கிறது.அதில் ஏற்பட்ட ஒரு அசம்பாவிதம் தான் குன்றத்தூர் அபிராமி விடயம் குன்றத்தூர் அபிராமி விவகாரம் நாம் அனைவரும் அறிந்ததே, கள்ளக்காதலன் சுந்தரத்துக்காக பெற்ற பிள்ளைகளை கொன்ற கொடூர தாய்.தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக இருவரையும் ஒரே வாகனத்தில் அழைத்து வந்த பொலிசார், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.விசாரணைக்கு பின்னர், இருவரின் நீதிமன்ற காவலையும் 12ம் திகதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதன்பின்னர் மீண்டும் ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர், வேனில் ஏறிய போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அப்போது அபிராமி சுந்தரத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதார்.

சுந்தரம் இறுகிய முகத்துடன் காணப்பட்டாராம்.அபிராமியை பார்க்க அவரது உறவினர்கள் வராத நிலையில், சுந்தரத்தின் மனைவி மட்டும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.