சுவிஸ்ஸில் ஹொட்டல் ரூம்… பாடகி சின்மயிக்காக காத்திருந்த கவிஞர் வைரமுத்து: வெளியான பகீர் தகவல்

ஏற்கெனவே ஒரு பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயிக்காக சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் அறையில் காத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தேசிய அளவில் மிகவும் பிரபலமான திரைப்பட பாடலாசிரியர்களில் ஒருவரும் 7 முறை தேசிய விருது பெற்றவருமான கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல பாடகி சின்மயி வருடங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சின்மயி, ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம்.நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்த உங்களுக்காக ஹொட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என தெரிவித்தார்.நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன்.

மட்டுமின்றி அவரை பற்றி 0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் பல லீலைகள் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை என சின்மயி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.