சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து ஏர்.ஆர்.ரகுமான் கொடுத்த அதிர்ச்சி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6 வது சீசன் பைனலில் சக்தி, செந்தில், ரக்சிதா, மாளவிகா, அனிருத், ஸ்ரீகாந்த் என 6 போட்டியாளர்கள் அற்புதமாக பாடினர்.இதில் கடைசியாக செந்தில் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்.

இதைத்தொடர்ந்து சூப்பர் சிங்கர் 6ஆவது சீசனின் வெற்றியாளர் செந்தில் கணேஷ் அவருக்கு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பு உள்ளது என்பது நமக்கு தெரிந்த விடயம்.செந்திலுக்கு வேறொரு இசையமைப்பாளர் படத்தில் பாடும் வாய்ப்பும் சமீபத்தில் கிடைத்திருந்தது.

இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் இசையில் இரண்டாவது பாடலையும் பாடும் அதிஷ்டம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது செந்தில் கணேஷ், முக்கா முலம் பாடலை பாடி அனைவரையும் அழ வைத்தார்.அந்த நிகழ்ச்சியின் முடிவில், சிவகார்த்திகேயன் தனக்கு மிகப் பெரிய inspiration என்றும், அவரது படத்தில் எப்படியாவது ஒரு பாடலாவது பாட அனுமதி கிடைத்தால் போதும் என்று கூறியிருந்தார்.

அவரது ஆசைக்கு இனங்க அவரது கனவு நாயகன் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு முக்கிய பாடலை பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது .தற்போது செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற அனுபவத்தை பற்றி பல மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.அதில் தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தெரிவித்து வருகின்றனர்.

அழிந்து வரும் மக்கள் இசை கலைஞர்களை மற்றும் கலைகளை ஆதரித்ததற்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். அதனால் இந்த படத்தில் ரஹ்மான் செந்தில் கணேஷுக்கு வாய்ப்புகள் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றது.