செந்தில் கணேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம் எ.ஆர்.ரகுமான் தாண்டி பிரபல இசையமைப்பாளரின் படத்தில் பாடுகிறார்

தமிழை வளர்க்கும் விதமாக பலரும் போராடி வருகிறார்கள். தங்களது பங்கிற்கு மக்கள் இசையை மட்டும் பாடி இப்போது சூப்பர் சிங்கர் 6வது சீசனின் வெற்றியாளராக உயர்ந்துள்ளவர் செந்தில் கணேஷ்.

பிரபல தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்-6 சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.இந்த சீசனில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. இதில் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி போட்டியாளர்களாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் கடந்த ஞயாறு அன்று நடந்தது இதில் `தாண்டவகோனே’ பாடலை செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றார்.

அதில் வெற்றி பெறுவோர்க்கு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பு உள்ளது என்பது நமக்கு தெரிந்த விஷயம். அதற்குள் செந்திலுக்கு வேறொரு இசையமைப்பாளர் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக இமான் தனது ட்விட்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் டி.இமான் இசையில் செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாட இருக்கிறாராம்.