செம்பருத்தி சீரியல் ஆதியா இது! உண்மையான மனைவி யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நாடகத்தின் மூலம் அந்த தொலைக்காட்சிக்கு டி.ஆர். பி அதிகரித்து கொண்டே போகின்றது.இதில், நடிக்கும் நடிகர்களுக்கு என்று தனி ரசிகர் வட்டாரம் உண்டு. செம்பருத்தி நாடகத்தில் பெண்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு சிறப்பாகவும், அமைதியாகவும் திறமையை வெளிகாட்டி வருபவர் ஆதி என்ற கார்த்திகேயன்.இவர், கனா காணும் காலங்கள் நாடகம் மூலம் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்தார்.கனா காணும் காலங்கள் நாடகம் முடிந்தவுடன் அவர் இரண்டு நாடகங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.இதேவேளை, அவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது யாசினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.குடும்ப வாழ்கையில் இணைந்த பின்னர் சுமார் 4 வருடங்களுக்கு மேல் எந்த தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க வில்லை.அதன் பின்னர் கார்த்திகேயனுக்கு செம்பருத்தி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் செம்பருத்தி நாடகம் அவருக்கு சிறந்த பெயரை கொடுத்திருக்கிறது. மேலும், சில படங்களிலும் ஆதி நடித்துள்ளார், அது மட்டும் இல்லை, செம்பருத்தி நாடகம் ஆதி வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ஆதியா இது என்று வியக்கும் அளவு அவர் அடையாளம் தெரியாமல் போய்விட்டார் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இதோ