செம்பாவுடனான காதல் முறிவுக்கு இது தான் காரணம்…. உண்மையான தகவலை வெளியிட்ட மானஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் பிரபலமாகி விட்டார். சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் ஆல்யா மானஸா, மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். ஆனால் இவர் சீரியலில் நடிப்பது இவரது காதலருக்கு பிடிக்காது என்பதால் இவர்கள் காதல் கதை முடிவுக்கு வந்தது.

புதிய காதல் மானஸ் ஆல்யா மானசா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.மானஸாவை போலவே இவரும் ஒரு நடன கலைஞர் தான் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் சமீபத்தில் ஒன்றாக சேனலில் பங்கேற்று பேசிய போது, ஆல்யா மானசாவின் காதல் பிரிந்ததைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் மானஸ்.

அதில் நான் யாருக்கும் பயப்படவில்லை நான் அப்பவே என் இணைய பக்கத்தில் காதல் முறிவை பற்றி வெளியிட்டேன் என்று கூறினார். மேலும் நான் உண்மையாக தான் இருந்தேன் ஆனாலும் என் கை மீறி போய்விட்டது. நான் யாரையும் தடுத்து நிறுத்த முடியாது.

அப்படி தடுத்தாலும் என்றாவது ஒரு நாள் என் கையைவிட்டு போக தானா செய்யும் என்று ஆல்யா மானஸாவின் காதலை பற்றி உருக்கமான பதிலை வெளியிட்டார். தற்போது ஆல்யா மானஸா ராஜா ராணி தொடர் கதாநாயகன் சஞ்சீவ் உடன் காதலில் உள்ளார் இதை ஆல்யாவும் மறுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.