செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது சிக்கிய கள்ளக்காதலி ..!! கணவரை கொன்று நாடகமாடியது அம்பலம்..!

தமிழகத்தின் வேலூரில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ரம்யா.தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2ம் திகதி மனைவிக்கு உணவு வாங்கிவர கடைக்கு சென்ற அருண்குமார் வீடு திரும்பவில்லை.மறுநாள் அங்குள்ள பகுதியில் முள்புதருடன் கூடிய கிணற்றின் மேல் அருண்குமார் சடலமாக கிடந்தார்.இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அருண்குமார் மனைவி ரம்யா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கண்ணீரே வராமல் அழுத ரம்யா மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது.இதையடுத்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று நள்ளிரவு ரம்யாவுடன் கடைசியாக பேசிய தாமஸ் என்பவரை பிடித்து விசாரித்த போது கொலைக்காண மர்மம் விலகியது.ரம்யாவும் அதேபகுதியை சேர்ந்த தாமஸ் என்பவருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த அருண்குமார் ரம்யாவை கண்டித்துள்ளார்.

தங்களுடைய காதலுக்கு அருண்குமார் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளனர்.அதன்படி கடந்த 2 ம் திகதி இரவு அருண்குமாரை ஓட்டலில் உணவு வாங்கிவரச்சொல்லி வெளியே அனுப்பிய ரம்யா, இதை தாமஸுடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திட்டமிட்டபடி காத்திருந்த தாமஸ் தனது கூட்டாளிகளான சங்கீத்குமார் ,சரத்குமார், ரஜினி ஆகிய 3 பேருடன் சேர்ந்து அருண்குமாரை மறித்து கை மாற்று கால்களை கட்டிபேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் தலையில் கல்லைபோட்டு கொலை செய்து சடலத்தை அருகில் உள்ள முள்புதரில் வீசி எறிந்துள்ளார்.

பின்னர் அருண்குமார் கொலை செய்யப்பட்ட செய்தியை ரம்யாவிடம் செல்போன் மூலம் தாமஸ் தெரிவித்துள்ளார். கணவர் கொல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக தாமஸுடன் அன்று இரவு முழுவதும் தனிமையில் ரம்யா இருந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து தாமஸ், ரம்யா, சங்கீத்குமார், சரத்குமார், ரஜினி ஆகிய 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.