சொந்தக்காரங்க வீடு திறந்திருந்தா போதும்..! எங்களுக்கு ஒரே மஜா தான்..! சிசிடிவியால் சிக்கிய காதல் ஜோடி!

சென்னை வளசரவாக்கத்தில் அருகே காரம்பாக்கம் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட செங்குட்டுவன் தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் 21-ஆம் தேதியன்று மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் ஒரு பெண் மற்றும் ஆணின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனால் காவல்துறையினர் அவ்விருவரையும் கைது செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. திருட்டில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் நித்யா என்பதும், அவருடைய காதலரின் பெயர் கார்த்திக் என்பதும் தெரியவந்துள்ளது. நித்யா பி.டெக் பட்டதாரியாவார். இவர் பாட்டி வீட்டில் தங்கி 12,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். 7 வருடங்களாக கார்த்திக்கை காதலித்து வந்துள்ளார். கார்த்திக்குக்கும் பெரிய அளவில் சம்பளம் இல்லை. இதனால் இருவரும் இணைந்து பல ப்ராஜெக்ட் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்.


ஆனால் அது பெரும் நஷ்டத்தில் முடிந்தது. பின்னர் இருவரும் ஆடம்பரமாக வாழ்வதற்காக திருட்டுத் தொழிலில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். அதன்படி உறவினர்களின் வீடுகளில் திருடுவது என்று முடிவெடுத்துள்ளனர். ஜெகதீசன் என்பவரின் வீட்டிற்கு, சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னால் சென்றுள்ளனர். ஜெகதீசன் சாவி மறைத்து வைக்கும் இடங்களில் பார்த்துள்ளனர். அதன்படி ஜெகதீசனை சம்பவத்தன்று ஏமாற்றி வெளியே வரவழைத்துள்ளனர். அதன்பின்னர் நித்யா தன்னுடைய கூட்டாளிகளுடன் வீட்டிற்குள் சென்று திருடியுள்ளார்.

ஜாக்கிரதையாக செயல்பட்டு இருந்தாலும் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிக்கி கொண்டுள்ளனர். காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே மற்றொரு உறவினர்கள் வீட்டில் திருடி மாட்டிக்கொண்டுள்ளனர் என்பதும், அதன் பின்னர் மன்னிப்பு கேட்டதால் நடவடிக்கை எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மனதில் வளசரவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது