சொந்த மகளிடமே இணையதளம் மூலம் விபரீதத்தில் ஈடுபட்ட தந்தை! அதிர்ச்சி சம்பவம்

பிரான்சில் இணையதளம் மூலமாக சொந்த மகளுக்கே தந்தை ஒருவர் காதல் வலை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பொபினி பகுதியைச் சேர்ந்த நபர் தந்தை ஒருவர் காதலர்களை தேடும் சமூகவலைதளம் மூலம் தன்னுடைய சொந்த மகளுக்கு காதல் வலை வீசியுள்ளார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மகளுக்கு அவர் பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபரின் மனைவி, மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என்று கூறியுள்ளார். இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெயர் மற்றும் தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை, முழு விசாரணைக்கு பின் அனைத்து தகவல்கள் தெரிய வரும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.