சொன்னதெல்லாம் பொய்..! லட்சுமி ராமகிருஷ்ணனை நம்பி ரூ.17 கோடியை இழந்த பரிதாபம்! KFJ நகைக்கடை மோசடி!

சென்னையில் மயிலாப்பூர், அண்ணாநகர், வளசரவாக்கம் இடங்களில் கேரளா பேஷன் ஜுவல்லரி என்ற பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகை கடையில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்க நகை சேமிப்புத் திட்டத்திற்காக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளம்பரத்திற்கு நடித்திருந்தார். இந்தத் திட்டத்தின்படி பழைய நகைகளை கொடுத்துவிட்டு அதற்கு ஈடான புதிய நகைகளை வாங்கிக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

எளிதான வகையில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காக மக்கள் பலர் போட்டி போட்டு கொண்டு பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.  ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் கடைக்கு இந்த திட்டத்தின் மூலம் 17 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. விளம்பரத்திற்கு பாக்கி வைத்ததற்காக இந்த கடையின் உரிமையாளர் சுனில் செரியன் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பலரும் கே‌.ஜி.எப் திட்டத்தில் 1999 ரூபாய் செலுத்தி நகை சேமிப்பு திட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால் இதற்கான காசோலைகளை எடுத்து சென்று வங்கியில் போட்டபோது கே.ஜி.எப் சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை நகைகளை யாவது மீட்டு செல்வோம் என்று என்ற பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நகை கடை உரிமையாளர் வைத்திருந்த 32 கோடி ரூபாய் கடன் தொகைக்காக அந்த நகைகளை வங்கிகள் ஏற்கனவே பறிமுதல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் பணத்தை செலுத்தியவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.


கடை உரிமையாளர் எவ்வாறு இவ்வளவு பணத்தை மீட்டெடுத்து நகைகளை திருப்பித் தரப்போகிறார் என்பது கேள்விக்குறியாகயுள்ளது. மேலும் வருவாயாக வந்த 17 கோடியில் 12 கோடியை பொதுமக்களுக்கு திருப்பி விட்டதாகவும், மீதமுள்ள 5 கோடியை எப்படியாவது மீட்டு தருவதாக சுனில் செரியன்  கூறுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சென்னையின் பெரும்பாலான இடங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.