குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து பொலிஸாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதலால் குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட அபிராமி தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.3 பெண்கள் தங்கக்கூடிய அந்த சிறை அறையில் முதல் நாளில் இருந்து சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் அபிராமி இருந்துள்ளார்.சாப்பிடுவதற்கு அழைத்து சென்றால் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து சக கைதிகள் வேடிக்கை பார்த்தார்களாம்.
இந்த நிலையில் தான் நேற்று மாலை அபிராமி திடீரென மயக்கமாகியுள்ளார்.
பின்னர் சிறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளாராம்.
தனது தவறை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து வருவதில் தாக்கம் தான் தற்போதைய மன அழுத்ததிற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.