முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று நடத்தப்பட்ட இந்த நிச்சயதார்த்தத்தில் 50 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. அரண்மனை செட்டப்பில் வடிவமைக்கப்பட்டு நடந்த இந்த நிச்சயதார்த்ததின் செலவு மட்டும் 26 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட திருமண பத்திரிகை இதனையும் தாண்டி, இஷா – பிரமோலின் திருமண பத்திரிகை 1 லட்சம் ஆகும். திருமணப் அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் அம்பானி கேதார்நாத் கோயிலுக்கும் சென்றார்.
அக்டோபர் 29ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்ற அம்பானி சுமார் 20 நிமிடங்கள் அங்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கு தனது மகள் இஷாவின் மீது தனிப்பட்ட பிரியம் என்பதால், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் சவுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட காரினை பரிசளிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஆனந்த் – இஷா திருமணத்திற்குப் பின் வசிப்பதற்கு, மும்பையின் வொர்லி பகுதியில் கடற்கரையை நோக்கிய ஆடம்பர பங்களாவை மாமனார் அஜய் பிராமல் பரிசாக வழங்குகிறார். ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பயிற்சி மையமாக இருந்த, ‘குலீட்டா’ என்ற இந்த கட்டடத்தை, 452 கோடி ரூபாய்க்கு வாங்கிய அஜய் அதில் மாற்றங்கள் செய்து வருகிறார்.
ஐந்து மாடிகளை உடைய இந்த கட்டடத்தில், மூன்று அடித்தளங்கள் உள்ளன. ஒரு அடித்தளத்தில், புல்தரை, திறந்தவெளி நீர் ஊற்று அமைப்பு மற்றும் பல்நோக்கு பயன்பாட்டு அறைகள் உள்ளன. மற்ற இரண்டு அடித்தளங்கள், கார் நிறுத்தம் மற்றும் இதர சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. ஆனந்த் – இஷா திருமணத்திற்கு அஜய் குடும்பத்தாரின் பரிசாக, இந்த பங்களா வழங்கப்படுகிறது.
மொத்ததில், உலகின் இளம் கோடீஸ்வரியா இஷா அம்பானி, இப்படி ஒட்டுமொத்த ஆடம்பரங்களால் அடுத்த மாதம் உலகை திரும்பி பார்க்கவைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.