தந்தையின் கள்ளக் காதலியை வைத்து மகன் செய்த காரியத்தை பாருங்க..!!!வீடியோ உள்ளெ

திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை காவல் நிலையம் அருகே பட்டப் பகலில் வெட்டிக் கொல்ல முயன்ற மகனை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பனியன் தொழிலாளி துரை. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், அருண் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் துரைக்கு, ரங்கநாயகி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ரத்தினம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்வதற்காக இரு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. விசாரணைக்காக ரங்கநாயகி காவல் நிலையம் வந்து கொண்டிருந்த போது திடீரென அவரை வழிமறித்த அருண், கத்தியால் அவரை வெட்ட
முயற்சித்தார். ஆனால் ரங்கநாயகி கடுமையாகப் போராடியதால் உயிர் தப்பினார். இந்தக் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

இதை அடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் அருணை பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரங்கநாயகியும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ரங்கநாயகிக்கு துரை ஆறுதல் கூறினார்.

அருணைக் காவல்துறையினர் கைது செய்தனர். வெட்டுக் காயம் பட்ட ரங்கநாயகிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.