தனது மகனால் இந்தியாவை விட்டே சென்ற பிரபல நடிகர் நெப்போலியன் – அடப்பாவமே இப்படி ஒரு காரணமா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் நெப்போலியன் அவர்கள். 1963-ம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி. இவருடன் பிறந்தவர்கள் 5-பேர். திருச்சியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த இவருக்கு நாகார்ஜூன் நடித்த உதயம் திரைப்படத்தை பார்த்த பிறகு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பிறகு சீவலப்பேரி பாண்டி உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தார். 2009-ம் ஆண்டு தி.முக.கட்சியில் சேரந்த இவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது நெப்போலியன் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்று தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியன் சார் சினிமாவிலும், அரசியலிலும் புகழின் உச்சியில் இருந்த நேரம் அது. அவரோட முதல் மகன் தனுஷ் பிறந்து, தளிர் நடைபோட ஆரம்பிச்சப்போ, சாரும் மேடமும் அணு அணுவா ரசிச்சு ஆனந்தபட்டாங்க. ஆனா அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. தனுஷூக்கு மூன்று வயசாகி நடக்க ஆரம்பிச்சப்போ, திடீர், திடீரென கிழே விழ ஆரம்பிச்சிருக்கான். என்னவோ ஏதோனு பதறி துடிச்சு, டாக்டர்கிட்ட போய் காட்டினாங்க. தனுஷை தாக்கியிருப்பது மஸ்குலர் டிஸ்ட்ரபி-ங்ற மரபியல் நோய்னு தெரிய வந்தப்போ, ரெண்டு பேரும் நிலைஞ்சு போயிட்டாங்க.

மூன்றரை வயசிலேர்ந்து சென்னையில் சிகிச்சை ஆரம்பிச்சு பிசியோ தெரபி முதல் எல்லா தெரபிகளும் கொடுத்தாங்க. தொடர்ந்து சிகிச்சை எடுத்துட்டிருந்தப்ப, திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கிற வீரவநல்லூர்ல, கட்டு வைத்தியம் செய்யும் பாரம்பரிய வைத்தியர் ராமசாமி பற்றி கேள்விபட்டு, தனுஷை அங்கே அழைச்சிட்டு போனாங்க. அப்ப தனுஷூக்கு வயசு 10. மகனுடைய சிகிச்சைக்காக அங்கேயே தங்கிட்டாங்க. சார் ரொம்பவே உடைஞ்சு போயிட்டார். ஆனா ஜெயசுதா மேடம் கொஞ்சம்கூட மனசை தளரவிடலை. உறுதியோட மகனுக்கான பயிற்சிகளை விடாமல் செய்ய வச்சார். மூணு நாலு மாசத்திலேயே நல்ல முன்னேற்றம் தெரிஞ்சது.

நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்த பையன், பிடிச்சுட்டு நடிக்க ஆரம்பிச்சதும் சாருக்கு ஆச்சர்யம் தாங்கல.இப்போ தனுஷூக்கு வயசு 17. அமெரிக்காவில் படிக்கிறார். தன்னோட வேலைகளை தானே பார்த்துக்கிற அளவுக்கு முன்னேறிட்டார்.

கட்டு வைத்திய முறை மூலமா, மருந்தே இல்லாத இந்த கொடிய நோயிலிருந்து தனுஷூக்கு மறுவாழ்வு கிடைச்சிருக்கு. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து தனுஷ் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நெப்போலியன்.