தன்னை விட வயதில் குறைந்த இளைஞனுடன் 3வது திருமணம்? 42 வயது பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ரேஷ்மா பசுபதி இயக்குனர் நிஷாந்த் ரவீந்திரன் உடன் ஒன்றாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் வாழ்க்கை மிகவும் குறுகியது. யார் உங்களை சிரிக்க வைத்து அன்போடு பார்த்துக் கொள்கிறார்களோ அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள் என்று அதில் கேப்ஷனும் செய்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ரேஷ்மா தனது அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்று செய்திகளை பரப்பி வந்தனர். அதுவும் தன்னை விட வயதில் குறைவான இளைஞனுடன் என்று கொளுத்திப் போட்டார்கள். இதைப் பற்றி அறிந்த நடிகை ரேஷ்மா இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளியாகும் செய்திகள் எதையும் நீங்கள் நம்ப வேண்டாம் .

மேலும் என்னைப் பற்றி எந்த தவறான செய்தியையும் பரப்ப வேண்டாம் எனவும் நடிகை ரேஷ்மா கூறியுள்ளார். நடிகை ரேஷ்மா தனது முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருக்கும்போது ரேஷ்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுவும் அவர் எதிர்பார்த்தபடி அமையாமல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.