தன் மகனுக்காக இப்படி கூட செய்வார்களா..??பள்ளியில் நிழந்த சுவாரஷ்யம்! அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்த வீடியோ

தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாகும். மகன்கள் பெரியவர்களாகும் போது தந்தை சிறிது இடைவெளியை கடைபிடிப்பார். ஆனால், அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளது. இது மீன் பிடிப்பது போன்றோ அல்லது விளையாட்டு சம்பந்தமான பாடங்கள் அல்ல. அதைவிட முக்கியமான வாழ்க்கை பாடங்களாகும்.!அப்படி ஒரு புனிதமான தந்தை மகன் உறவை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் தன் தாயை இழந்த குழந்தைக்கு தந்தை பெண் வேடமிட்டு அன்னையாக மாறிய வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது

.தாய்லாந்து நாட்டின் அன்னை என அழைக்கப்படும் ராணி ஸிர்கிட்டி-யின் பிறந்த நாளான ஆகஸ்ட்.,12-ஆம் நாள் தாய்லாந்து நாட்டின் அண்ணையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நாளில் பள்ளி குழந்தைகள் அவர்களது அன்னையுடன் பள்ளி வருவது வழக்கம். ஆனால் தாய்லாந்தின் உத்தாய் என்னும் பகுதியை சேர்ந்த சாட்சாய் பார்ன்

என்பவரது 5 வயது மகனுக்கு தாய் இல்லை என்பதால் தானே தாயாக மாறி பள்ளிக்கு சென்றுள்ளார்.சாட்சாய் பார்ன்-ன் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்ட காரணத்தால் பள்ளி நிகழ்ச்சியில் தன் மகனது மனம் புன்படாமல் இரக்கவேண்டும் என விரும்பினார்

இதற்காக சாட்சாய் பார்ன்,பெண் வேடமிட்டு தன் மகனுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.இச்சம்பத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.வைரலாகும் வீடியோ பதிவு இதோ