மனைவி வீடியோ எடுக்க வைத்துவிட்டு, மனைவியின் தங்கைகளுடன் சேர்ந்து ஏரியில் குளித்த கணவர், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜனாகான் மாவட்டத்தைச் சேர்ந்த அபினாஷ் (31 வயது) என்பவர் ஐதராபாத்தில உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சனிக்கிழமை விடுமுறை என்பதால், அபினாஷ், தனது மனைவி திவ்யா மற்றும் மைத்துனிகள் சங்கீதா
சுமலதா ஆகியோருடன் பொம்மபூர் ஏரிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது, திவ்யா கரையில் இருந்தபடி வீடியோ எடுக்க, அபினாஷ், அவரது மைத்துனிகள் 2 பேர் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். இந்நிலையில், ஏரியின் ஆழப்பகுதிக்குச் சென்ற அபினாஷ், காப்பாற்றும்படி சைகை காட்டவே,
அவரை காப்பாற்ற மைத்துனிகள் 2 பேரும் முயற்சித்துள்ளனர். ஆனால், 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்த திவ்யா கூச்சல் போட்டம் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில்
இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.