கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது வெறும் கொலை அல்ல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு கொடுக்கப்பட்டால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தோஷ்குமார் குறித்தும், கொலை குறித்தும் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டு உட்புற வடிமைப்பு பணிகளை மேற்கொள்ளும் சந்தோஷ்குமார் திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை பிரிந்தவர்.
ஐயம்மமான் என்பவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார். இவரது பேரன் தான் சந்தோஷ்குமார். துக்கம் விசாரிக்க வந்த சந்தோஷ்குமார், அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால், சிறுமி காணாமல் போன பின்னர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடிய பெற்றோர், அருகில் துக்க வீடு என்பதால் அந்த பாட்டி வீட்டில் தேடாமல் இருந்துள்ளனர். ஆனால், சிறுமியை அங்குதான் வைத்திருந்துள்ளார் சந்தோஷ்குமார்.
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி சத்தம்போட்ட காரணத்தால் வாயில் தனது டிஷர்ட்டை வைத்து அமுக்கியுள்ளார். அப்போது அந்த குழந்தை மயக்கமடைந்துள்ளது. எனவே வெளியில் சென்றால் உண்மை வெளியாகிவிடும் என்பதால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், பெற்றோர்கள் விடிய விடிய குழந்தையை தேடியதால் அதிகாலை 4 மணிக்குமேல் குழந்தையை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து போட்டுள்ளார். மேலும், 6 மாதத்திற்கு முன்னர் குழந்தையை மிரட்டியுள்ளதாகவும் விசாரணயில் தெரியவந்துள்ளது.