தமிழகத்தை ஒரே நாளில் தன் பக்கம் திசை திரும்பி பார்க்க வைத்த பேருந்து நடத்துனர்…!!! நடத்துனருக்கு குவியும் பாராட்டுக்கள் வீடியோ உள்ளே

கோவை செல்லும் அரசு பேருந்து நடத்துனர் பயணிகளிடம் பேருந்து புறப்படும் முன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் பேசியது “பேருந்துளில் பயணம் செல்லும் நாம் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். அரசு புதிய பேருந்துகளை பயணிகளை நம்பியும், பயணிகளின் போக்குவரத்துக்காகவும் கொடுத்துள்ளனர்.

அது போல தொலைவான தூரம் போகும் பயணிகளுக்கு ஏதும் சிரமம் பேருந்தை நிறுத்த வேண்டும் என்றால் தாராளமாக பேருந்தை நிறுத்துகிறோம். அது மட்டும் அல்லாமல் பயணம் செய்யும் ஊரின் பேருந்து கட்டணத்தையும் தெளிவாக சொல்கிறோம். உங்கள் பயணம் நல்ல விதமாக அமைய நடத்துனரான எனதும், ஓட்டுனருடைய வாழ்த்துக்கள்” என்று மக்களிடம் பேசினார் நடத்துனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது மக்கள் அனைவரும் நடத்துனரின் இந்த செயலை வரவேற்று பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நடத்துனரா என்று ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. தற்பொழுது அந்த பேருந்து நடத்துனரின் செயலை கண்டு ட்விட்டரில் பல்வேறு துறையினர் பாராட்டி வருகின்றனர். திமுக கட்சியின் MLA பதவியில் இருக்கும் TRB ராஜா அவர்கள் ட்விட்டரில் அவர்களை பாராட்டி உள்ளார்.