பிரபல தனியார் தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் வாழும் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போட்டிப் போட்டு கிராமிய கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் அவர் மனைவி ராஜலட்சுமி ஆகியோர் மக்கள் மத்தியில் கிராமிய இசைக்கு மாற்றொரு பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த போட்டியில் இறுதி சுற்று வரை சென்று பட்டத்தை தட்டிச் சென்றார் செந்தில் கணேஷ் . மேலும் இவர்கள் இருவரின் இசையில் புகழ்பெற்ற சின்ன மச்சான் பாடலும் சமீபத்தில் பிரபு தேவா படத்தில் இடம்பெற்றது
இந்நிலையில் இந்த பாடலை நாடுகடந்த வயதான ஜோடிகள் பாடி மீண்டும் இசைக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்த குரலை கேட்டு தமிழர்களே வியப்பில் மூழ்கியுள்ளனர்.