கிருஷ்ணகிரியில் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கோவிந்தராஜின் பெற்றோர் கிட்டம்பட்டியில் தம்பி சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கஸ்தூரிக்கும் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது கோவிந்தராஜிற்கு தெரிய வந்ததும், அவர் கஸ்தூரியை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால், கஸ்தூரி இதை கண்டுக்கொள்ளாமல், தனது தொடர்பினை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே இந்த விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் பொறுமை இழந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கோவிந்தராஜும் பொலிசாரிடம் சரணடைந்தார்