தம்பி மனைவி மீது மோகம் கொண்ட போலீஸ் எஸ்.ஐ..! அழகிய மனைவி மர்ம மரணத்தின் அதிர்ச்சி பின்னணி..!

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஜெய்கணேஷின் மனைவி ப்ரவீணா திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்ததா இறந்து கிடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரவீணாவிற்கு தாய் தந்தை யாரும் இல்லாமல் அவரை சிறு வயதிலிருந்தே அவருடைய அத்தை தான் வளர்த்துள்ளார். மதுரையைச் சேர்ந்த பிரவீணாவிற்கு பதினேழு வயது இருக்கும்போதே சென்னைக்கு வந்துள்ளார். அப்போது மார்க்கெட்டிங் வேலை செய்துவந்த ஜெய்கணேஷ் பிறகு காவல் பயிற்சியில் தேர்ச்சி பெற்று காவல் உதவி ஆய்வாளராக உயர்ந்துள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் திடீரென ப்ரவீணா மர்மமான முறையில் இறந்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மேலும் ப்ரவீணா தூக்குப்போட்டு இறந்து உள்ளார் என ஜெய்கணேஷ் புகார் தெரிவித்து குறிப்பிடத்தக்கது. இதை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் மதுரையிலிருந்து சென்னை சேலையூர் அடைந்தனர். தற்போது பிரவீணாவின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரவீணாவின் அத்தை கலாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது, பிரவீணாவிற்கு 17 வயது இருக்கும் போதே ஜெய்கணேஷ் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்த கலா, விஜய்க்கும் அவரது தம்பி மனைவிக்கும் தகாத உறவு உள்ளது என ப்ரவீணா ஏற்கனவே தெரிவித்து இருந்தார் என்ற குண்டை தூக்கிப்போட்டு உள்ளார்.

இதனையடுத்து ப்ரவீணாவிற்கும் ஜெய்கணேஷ்கும் பலமுறை தகராறு ஏற்பட்டதாகவும், மேலும் சில மாதங்களாகவே ஜெய்கணேஷ்,பிரவீணாவை சித்திரவதை செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலையூர் காவல் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஜெய் கணேஷ் வேலை செய்யும் காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஜெய் கணேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.