தல தோனி கோவப்பட்டு திட்டி பார்த்திருக்கிறீர்களா..?? இணையத்தில் வைரலாகும் காணொளி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தண்ணீர் எடுத்து வந்த கலீல் அகமதுவை தோனி திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. தண்ணீர் கொண்டு வந்த கலீல் அகமது பிட்ச் மீது நடந்து வந்ததை சுட்டிக்காட்டிய தோனி, சுற்றி வருவது தானே என கேட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் கோலி சதமும், தோனி அரைசதமும் கடந்து அசத்தினர்.

நேற்றையை போட்டியின் போது வெப்பம் அதிகமாக இருந்ததால் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சோர்வடைந்தனர். ரோஹித், தவான், கோலி ஆட்டமிழக்க தோனியும், தினேஷ் கார்த்திக்கும் இறுதி வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதனால் தினேஷ் கார்த்திக் உட்ன் சேர்ந்து பேட்டிங் செய்த தோனி ரன் எடுக்க அதிக முறை ஓட நேரிட்டது. இதன் காரணமாக சோர்வடைந்த் தோனி மயக்கமடையும் நிலைக்கு உள்ளானார்.

இதையடுத்து மைதனத்தில் தோனிக்கு மருத்துவர் சிகிச்சை அளித்தார். அதன்பின்னர் ஓவர்களுக்கு இடையே தோனிக்கும், கார்த்திக்கும் சக வீரர் கலீல் அகமது தண்ணீர் குடிக்க எடுத்து சென்றார். அப்போது மைதானத்தின் பிட்ச் மீது கலீல் நடந்து சென்றதை பார்த்த தோனி,

“ பிட்ச் மீது நடந்து வரலாமா? சுற்றி வரவேண்டியது தானே “ என கேட்டார். கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி மைதனத்தில் கலீல் அகமதுவை திட்டிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது