தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னை எப்போதும் பரபரப்பாக திகழ்ந்து வருகிறது.தொழில்களின் தலைமை இடமாக கொண்ட சென்னை நகரில் பலதரப்பட்ட மக்கள் பிழைப்புக்காக குடியேறுகின்றனர் “வந்தாரை வாழவைக்கும்” சென்னை நகரத்தில் அன்றாடம் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
இந்த வீடியோ பதிவு ஒரு வயதான முதியவரை 2 இளைஞர் கொடூரமாக தாக்கு கின்றனர்.அங்குள்ள ஒருவர் இந்த சம்பவத்தை பேஸ்பூக் இல் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கும் காணொளியாக இருக்கிறது.
இதில் வயதான முதியவர் ஒருவர் தள்ளுவண்டி உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அங்கு சென்ற இரு இளைஞர் கடனுக்கு உணவு தருமாறு கேட்டுள்ளனர்.அவர் குடுக்க முடியாது என்று சொன்னதும்.
அடுத்த நாள் அங்கு சென்ற அந்த இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக தாக்குகின்றனர்.அங்கு சுற்றி இருந்த பொதுமக்களில் ஒருவர் கூட தடுக்க வரவில்லை.மேலும் தாக்குதலுக்கு ஆள் ஆக்கப்பட்ட அந்த முதியவர் நிலைகுலைந்து அங்கேயே சரிந்தார்.
இது போன்ற இளைனர்கள் நிச்சயம் போலீசால் அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும். அந்த முதியவர் தாக்கப்படும் வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது