
தற்போது மியூசிகலி மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். சிலரின் காணொளிகளுக்கு பலரும் பாராட்டி வந்தாலும் சிலர் வசைபாடி வருகின்றனர்.அவ்வாறு வசைபாடியதால் இங்கு பரிதாபமாக ஒரு உயிர் பலியாகியுள்ளது. திருநங்கையான கலையரசன் என்ற 24 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவரது மியூசிகலி காணொளியில் தனது திறமையினை அழகாக வெளிக் கொண்டு வந்தவர், பார்வையாளர்களின் கருத்திற்கும் தைரியமாகவே பேசியுள்ளார். இவ்வாறு தைரியமாக பேசிய நபரா இப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற வருத்தம் அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது.