தாயும் மகனும் சேர்ந்து செய்த மோசமான செயல்..!!! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

திருச்சி மாவட்டம் பாலூரை சேர்ந்தவர் 35 வயதுடைய ராணி இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சுத்திகரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார் இவருடைய மகன், தீபன் 16 வயது பள்ளி மாணவர்.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமணியில் சுத்திகரிப்பு மேலாளராக பணிபுரிபவர் ராணி.அதே மருத்துவமணியில் பணிபுரியும் தனது தோழியுடன் ATM-ர்க்கு செல்லும் பொது அவரது ரகசிய என்னை கவனித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று தனது தோழியின் ATM கார்டை திருடி சென்றுள்ளார்.பின் தனது மகனிடம் அந்த கார்டு மற்றும் ரகசிய என்னை கொடுத்து பணம் எடுத்து வர செய்துள்ளார் இதன் மூலம் இரண்டு நாட்களாக தொடர்ந்து அந்த வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 50000 முழுவதையும் எடுத்துள்ளார்.

ATM கார்டை தொலைத்த அந்த பெண்ணின் மொபைலிற்கு வங்கியிலிருந்து பணம் எடுத்த குறுந்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளர்.பணம் எடுத்த ATM மையத்தின் CCTV காட்சிகளை ஆராய்ந்த பொது ஒரு சிறுவன் தான் இந்த பணத்தை எடுத்துள்ளான் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

பின் CCTV காட்சிகளை வைத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர்.விசாரணையில் அவரதுதாய் தான் ATM கார்டை திருடியுள்ளார் என்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த இவ்வழக்கில். கைது செய்யப்பட்டுள்ள தாயாரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை சிறையில் அடைந்துள்ளார், மகனின் வயது மற்றும் அறியாமையை கருதி விடுதலை செய்துள்ளார்.