திடீரென அலறினார்..! உடல் முழுவதும் கருகினார்..! வீடியோ காலில் கணவன் சாவதை நேரலையில் பார்த்த மனைவி! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கலை சுந்தரி. இவர்கள் இருவருக்கும் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆன நிலையில் சிவானி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜசேகர் குடும்ப சூழ்நிலை கருதியும், என் எதிர்காலம் கருதியும் பணம் சேர்க்கும் எண்ணத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதையடுத்து சூடான் நாட்டில் உள்ள கார்ட்டூமின் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தினமும் பணிக்கு செல்லும் முன்பும் பணி முடித்துவிட்டு கையெழுத்து இட்டு விட்ட பின்பும் தனது மனைவிக்கு வீடியோகால் மூலம் அழைத்து பேசுவார். பெரும்பான்மையான நேரங்களில் பணிக்கு செல்லும் முன் பேசுவதைவிட பணி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் பொழுது பேசுவது தான் அதிகம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சூடான் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 18 இற்கும் மேற்பட்டோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதிலும் தமிழகத்தில் கடலூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார் என்ற செய்தி இந்திய தூதரகத்தின் மூலம் வந்தது. அதன்படி அவரது மனைவியிடம் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க யில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில், எனது கணவர் எப்பொழுதும் பணி முடித்து விட்டு என்னுடன் வீடியோ காலில் பேசுவார். ஆனால் அன்று மட்டும் காலையிலேயே பணியில் இருக்கும்போது கால் செய்து பேசினார். அப்போது தனக்கு புடவை வாங்கித் தருவதாகவும் தனது மகள் கேட்டபடி பெரிய கொலுசு மாற்றி தருவதாகவும் உறுதியளித்தார். மேலும் பொங்கலுக்கு எங்களை காண வருவதாக ஆசை வார்த்தை கூறிய அவர் திடீரென அலறியபடி செல்போனை கீழே போட்டார்.


தான் மாமா என்னாச்சு என்னாச்சு மாமா என்று கதறினேன். பின் தீ பரவிய காட்சிகளுடன் வீடியோ கால் கட்டானது. இதையடுத்து உறவினர்களை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவிக்கையில் அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில் எனது கணவர் இறந்து போன செய்தி தெரிய வந்தது. என் கண்முன்னே எனது மாமா இறந்த சம்பவத்தை நான் எப்படி மறக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. என் மனது சுக்குநூறாக உடைந்து விட்டது என்று கதறி அழுது கொண்டே பேசினார். இது அங்குள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.