திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம்! பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிக்கும் பிரபலத்தின் மகன்? வெளியான புகைப்படம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு வாக்குமூலத்தின் அடிப்படையில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கும்பல் அவர்களை ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு சிபிசிஐடி பொலிசில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்.

பொள்ளாச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு, சிபிசிஐடி பொலிசார் வரும் 28ம் திகதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். திருநாவுக்கரசிடம் மணிமாறன் நன்றாக பழகி வந்ததாகவும், பேஸ்புக் மூலம் இருவருக்கும் பல தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்த நிலையிலேயே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.