
சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேரளாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பேஸ்புக் தளத்தை, மெட்ரிமோனி தளமாக பயன்படுத்தியுள்ளது வைரலாகியுள்ளது.மலப்புறத்தில் வசித்து வரும் ஜோதி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எனது பெயர் ஜோதி வயது 28 எனக்கு பெற்றோர் கிடையாது.
Fashion Designing படித்து முடித்துள்ள எனக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். நண்பர்களே…உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.ஜோதிடம், சாதி இவைகளை நான் பார்ப்பதில்லை என பதிவிட்டுள்ளார். இதனுடன் தனது அண்ணன் மற்றும் சகோதரி ஆகியோரின் படிப்பு அவர்கள் படிக்கும் வேலையையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 26 ஆம் திகதி இவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது 6,000 shares பெற்றுள்ளது. மேலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷீபெர்க்குக்கும் சேர்த்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் என்னை போன்ற தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்வதற்கு உதவியாக வசதியை நீங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இது சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உதவும் என கோரியுள்ளார். பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிடவே பெண்கள் பயந்துகொண்டிருக்கையில், துணிச்சலாக தனது புகைப்படம் மற்றும் விவரங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.