6 நாட்களாக மாயமாக இருந்த ஆசிரியை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேதபிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த குமாரி அங்கிதா என்ற 25 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

அங்கிதாவுக்கு தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் இருவரும் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். இந்நிலையில் இந்த மாதம் 7-ஆம் தேதியன்று தன் மனைவியை காணவில்லை என்று வேதபிரகாஷ் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனாலும் அங்கிதாவை காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஜார்கண்ட் மாநில தலைநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்தின் குட்டையில் ஆசிரியையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
