இந்தியாவில் கள்ளக்காதலனால் இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோர் நகரை சேர்ந்தவர் சுபம் ஷக்யா. இவருக்கும் காஜல் (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதையடுத்து நிகில் என்ற இளைஞருடன் காஜலுக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வேலை விடயமாக ஷக்யா வெளி ஊருக்கு சென்ற நிலையில் காஜலுக்கு நிகில் போன் செய்துள்ளார். ஆனால் காஜல் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
அப்போது காஜல் வீட்டில் தோழி பூஜா உடன் இருந்தார். அப்போது ஆத்திரத்துடன் காஜல் வீட்டுக்கு வந்த நிகில் கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் காஜலை பூஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைமாக உள்ள நிகிலை தேடி வருகிறார்கள்.