திருமணமான 3 நாட்களில் மணப்பெண்ணின் விபரீத செயலால் உயிரிழந்த காதல் கணவன்..!!

காதலர்களாக இருக்கிற காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த நேசத்தோடு பழகுகிறார்கள். பெற்றோர்களையும் எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பின் அவர்களது காதல் சிறு தொய்வு பெற்றாலும் அதன் முடிவு விபரீதமே.அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்பதிவில் நாம் பார்க்கபோகிறோம் .சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லதுரை இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர்  திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்னர், தனது கணவர் வீட்டுக்கு வந்த தீபா, அங்கு கழிவறை இல்லை என்பதை தெரிந்துகொண்டார்.கழிவறை இல்லாத வீட்டில் என்னால் வாழ இயலாது. நான் எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கூறிவிட்டு தனது கணவனை விட்டு பிரிந்துசென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து தீபாவை சமாதானம் செய்ய தொலைபேசி மூலமாகவும் நேரில் சென்றும் செல்லதுரை பல முறை  முயன்றும் அவரது வீட்டில் வந்து வசிக்க தீபா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த செல்லதுரை தனது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.இதனால் செல்லதுரையில் பெற்றோர் சோகத்தில் உள்ளனர்.