திருமணமான 6 நாட்களில் தம்பதிகள் போட்டி போட்டு செய்த விபரீதம்..!! மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் வலப்பிரம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த நித்யா என்பவருக்கும்,  அதே பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருக்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.திருமணமான முதல் நாளிலிருந்தே இருவருக்கும் மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதில் கடந்த திங்களன்று கணவன் மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த மாப்பிள்ளை சுந்தரராஜன் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். சுந்தரராஜனை, அவரது பெற்றோர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் நித்யாவும் தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால், நித்யாவின் தந்தை மணமக்கள் இருவரையும் தனது வீட்டில் அழைத்து சென்று வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு சென்ற நித்யா விஷம் அருந்தியுள்ளார்.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். கொண்டு செல்லும் வழியிலேயே நித்யா உயிரிழந்துள்ளார்.

இதனைதொடர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடமும், நித்தியாவின் குடும்பத்தாரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  திருமணமாகி ஆறு நாட்கள் மட்டும் கடந்த கடந்த நிலையில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.