திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்தது எதற்காக? குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்ததற்கான காரணத்தை குற்றவாளி சதீஷ்குமார் பொலிசாரிடம் கூறியுள்ளான். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்கிற 20 வயது மாணவி, கோவையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 5ம் திகதியன்று அவருடைய அம்மாவிற்கு போன் செய்து விடுமுறையில் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீடு வந்த சேராத பிரகதி, நேற்று மாலை சாலையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். அவரை பற்றி மேற்கொண்ட விசாரணையில், சதீஷ்குமார் பிரகதியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குற்றவாளியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு அதனை வெளியிட்டுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், நானும் பிரகதியும் சிறுவயது முதலே காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நேரத்தில், என்னுடைய விருப்பம் இல்லாமலேயே என்னுடைய பெற்றோர் வேறு பெண்ணுடன் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகி வந்தேன். எனக்கு குழந்தை பிறந்ததும் பேச்சை வார்த்தையை சிறிது குறைத்துக்கொண்டேன்.

இந்த நிலையில் தான் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் அவர் என்னை தொந்தரவு செய்ய மாட்டார் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு போன் செய்து என்னுடன் தான் வாழ்வேன் என்றும், திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறினார்.

மேலும் அவருடன் பழகிய நாட்களில் பணம், நகை ஆகியவற்றை கொடுத்து அதிக கடனாளியானேன். இந்த நிலையில் மீண்டும் என்னிடம் பணம், நகை கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். என்னுடன் தான் வாழ்வேன் என்றும் தொந்தரவு செய்ததாலே, திட்டமிட்டு அவரை அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.