திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை நண்பனுடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்து கொன்று நாடகமாடிய தம்பி: விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி போன்று பழகிய பக்கத்துக்கு வீட்டு இளைஞர் நண்பருடன் சேர்த்து துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பூபதி – அகிலாண்டேஸ்வரி தம்பியினர். இவர்களுக்கு அம்சப்பிரியா (25) ஒரே மகள் என்பதால், அதிக செல்லம் கொடுத்து வளர்த்துள்ளனர். சமீபத்தில் அவருடைய காதலுக்கு கூட சம்மதம் தெரிவித்து, ஜனவரி மாதம் 27ந் தேதி திருமணத்திற்கு நிச்சயம் செய்தனர். இந்த நிலையில் வெளியில் சென்றுவிட்ட வீடு திரும்பிய தம்பதியினர், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி துடித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீடு உள்பக்கம் தாழ்பாளிடப்பட்டிருந்ததால் தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ந்து நின்ற பொலிஸார், சம்பவத்தன்று அம்சப்பிரியாவின் வீட்டிற்கு சென்ற ஒரே நபரான பக்கத்து வீட்டை சேர்ந்த தீபக்கிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் பெண்ணின் உறவினர்கள், தீபக்கிற்கு 21 வயது தான் ஆகிறது. அவன் அம்சப்பிரியாவை அக்கா என்று தான் அழைப்பான். இருவரும் அக்கா-தம்பி போல தான் பழகி வந்தார்கள் என கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத பொலிஸார் தீபக்கை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சரியான முறையில் கவனித்தனர். அப்போது வலி தங்க முடியாமல், செய்த தவற்றை தீபக் ஒப்புக்கொண்டான்.

சம்பவம் நடைபெற்ற அன்று, தீபக் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து கஞ்சா பிடித்து போதையில் இருந்துள்ளான். அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அம்சப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தவாறே வீட்டிற்குள் சென்றுள்ளான். வாடா தம்பி என கூறியபடியே அம்சப்பிரியாவும் பேசிக்கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தில் தீபக்கின் நண்பனும் வீட்டிற்குள் வந்துள்ளான்.

இரண்டு பேருமே போதையில் இருப்பதை அறிந்துகொண்ட அம்சப்பிரியா, வெளியில் போகுமாறு இருவரிடமும் கூறியுள்ளார். அந்த சமயம் பார்த்து அம்சப்பிரியாவின் தலைப்பகுதியில் தாக்கி இருவரும் மாறி மாறி துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக இறுதியில் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போதையில் தெரியாமல் செய்துவிட்டோம் என விசாரணையில் தீபக் கதறி அழுதுள்ளான். தற்போது இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தப்பி சென்ற அவனுடைய நண்பனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.