திரைப்படத்தின் எதிரொலி..!! 10-ஆம் வகுப்பு மாணவர் தலைமையில் நடந்த கொடூர கொலை..!! எதற்காக தெரியுமா?

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி சங்கர் (வயது33). இவர் களக்காட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இசக்கி சங்கர் தினமும் அதிகாலை தனது கிராமத்தின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளிப்பது வழக்கம். நேற்று அப்படிக் குளிக்க சென்றபோது, இசக்கி சங்கரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியது. பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்தவழியாக வந்தவர்கள் ஆற்றங்கரையில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்து காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, வீரவநல்லுாரை அடுத்து உள்ள வெள்ளங்குழியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இசக்கிசங்கர், களக்காட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியில், எழுத்தராக பணிபுரிந்தார். வீட்டிற்கு அருகில் வசித்த, கல்லுாரி மாணவி, சத்தியபாமாவும், 21, இசக்கிசங்கரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்தனர்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், முதலில் மறுத்த பெண் வீட்டினர், பின் திருமணத்திற்கு சம்மதித்தனர். இந்நிலையில், நவ., 20ல், தாமிரபரணி ஆற்றில் குளிக்கச்சென்ற இசக்கிசங்கர், வெட்டிக்கொல்லப்பட்டார். சத்தியபாமா, தந்தை தளவாய் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர். இசக்கிசங்கர் கொல்லப்பட்டதால் மனம்உடைந்த சத்தியபாமா, அன்று இரவே, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பெண்ணின் உறவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சத்தியபாமாவின், 15 வயது தம்பி உள்ளிட்டோர், இக்கொலையை செய்தது தெரிந்தது. தம்பி, 10ம் வகுப்பு படிக்கிறான். உடன் படித்த மாணவன், பிளஸ் 1 மாணவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் நெல்லை சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.