துப்பாக்கி முனையில் சிக்கிய அப்பா… துணிச்சலாக திருடர்களை விரட்டி பிடித்த 8 வயது மகள்..! வைரலாகும் வீடியோ

தன் வீட்டில் திருட வந்த நான்கு திருடர்களை ஓட ஓட துரத்தி இருக்கிறார் 8 வயது சிறுமி ஒருவர். இந்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் கவைட் என்று பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 8 வயது நிரம்பிய ப்ரியேல் மினியா அல்பா என்ற சிறுமிதான் இந்த சாகசத்திற்கு சொந்தக்காரி. இந்த சிறுமி திருடர்களை துரத்தும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இவருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.சிறுமி ரியேல் மினியா அல்பா வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான்கு பேர் சிடி விற்க வந்து இருக்கிறார்கள். வீட்டிற்குள் வந்த அவர்கள் துப்பாக்கி முனையில் வீட்டில் இருந்து பொருட்களை எல்லாம் தங்கள் பைகளில் எடுத்து வைத்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி மட்டும் வீட்டிற்கு வெளியே உள்ளே நடப்பது எதுவும் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்பாவை தாக்கிய திருடர்கள்
இந்த நிலையில் திருடன் ஒருவன் சிறுமி ரியேல் மினியா அல்பாவிற்கு முன்பே, அவளின் அப்பாவை போட்டு அடித்து இருக்கிறான். இன்னொரு திருடன் துப்பாக்கி முனையில் எல்லோரையும் நிற்க வைத்துவிட்டு வெளியேற முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த நான்கு திருடனில் ஒருவன் அந்த சிறுமி மீது தடுக்கி கீழே விழுந்துள்ளான்.உடனே சுதாரித்துக் கொண்ட அந்த சிறுமி.

அந்த திருடனின் கையில் இருந்த பையை பிடுங்கி இருக்கிறாள். அதன்பின் கீழே விழுந்த பணத்தை எல்லாம் வெகுவேகமாக எடுத்து பாதுகாத்துள்ளார். அது மட்டுமில்லாமல் வேகமாக அந்த திருடர்களை துரத்தி சென்றுள்ளார். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தும் கூட துரத்தி உள்ளார்.

பைக்கில் பையோடு இருந்த திருடனை பிடித்து இழுத்து, அவன் வைத்திருந்த பையை பிடுங்கி பாதுகாத்துள்ளார். மொத்தமாக திருடர்கள் எடுத்து செல்ல முயன்ற முக்கால்வாசி பொருட்களை அந்த சிறுமி காப்பாற்றியுள்ளார். இவருக்கு மூக்கில் மட்டும் சிறிய முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.