தூங்கி எழுந்தவுடன் வந்த தொலைபேசி அழைப்பு! திடீரென கோடீஸ்வரனாக மாறிய இளைஞர். காரணம் என்ன தெரியுமா???

அதிஷ்ட்டம் யாருக்கு வரும் என்று யாரும் முன்பாக நினைப்பதில்லை. ஆனால் அப்படி ஒரு அதிஷ்ட்டம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அடித்திருக்கிறது. சிட்னியை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் நேற்று காலை தூங்கி எழுந்தார், பின்னர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசிய லாட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு
லாட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது, நீங்கள் கோடீஸ்வரர் ஆக்விட்டீர்கள் என கூறினார்கள்.

இதை முதலில் நம்பாத இளைஞர் ஆன்லைனில் அது குறித்து பார்த்த போது அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பெரிய அளவிலான பரிசு பணம் கிடைத்தது தெரியவந்தது. இது குறித்து அதிர்ஷ்டசாலி இளைஞர் கூறுகையில், என்னால் இன்னும் இதை நம்பமுடியவில்லை, நான் இப்போது கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் என நினைக்கிறேன். எனக்கு கடன்கள் உள்ளது, பரிசு பணத்தை வைத்து முதலில் கடன்களை அடைப்பேன்.

பரிசு விழுந்துள்ளதால் எந்த கவலையும், மன அழுத்தமும் இல்லாத 2020 புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இப்படி பட்ட நிகழ்வுகள் எல்லாம் நமக்கு நடக்காத? என்று எங்கும் நபர்களில் நாமும் ஒருவர் தானே.