ஒரு ஏழை குடும்பத்தின் வாழ்க்கைக்கு உதவி செய்ய எஸ். ஜே. சூர்யா தெருவில் நின்று பூ விற்றுள்ளார். நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நிகழச்சிக்கு இந்த வாரம் எஸ். ஜே. சூர்யா சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றி வைத்துள்ளார். பூ விற்கும் போது அவர் நடித்த புதிய படத்தின் சில காட்சிகள் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண் சிறுவயதில் தந்தை குடும்பத்தை கைவிட்டு சென்றுள்ளதாகவும்,
தாய் கிட்னியை விற்று குடும்ப பொறுப்புகளை செய்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது தாயின் உடல் நிலையும் மிக மோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை பார்த்த நடிகர் விஷால் கண்ணீர் சிந்தியுள்ளார்.