தேனிலவு புகைப்படங்களை வெளியிட்ட சயீஷா: நல்ல வேளை யாரும் திட்டல

தேனிலவின் போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை சயீஷா. நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு சென்றுள்ளனர். தேனிலவுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்களை சயீஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரபலங்கள் தேனிலவுக்கு சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

சயீஷா வெள்ளை கவுன் அணிந்திருக்கும் சயீஷாவை ஆர்யா புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தான் சயீஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஆர்யாவுக்கு இவ்வளவு அழகாக புகைப்படம் எடுக்கத் தெரியுமா?. நீங்கள் இருவரும் இன்று போல் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

ஆர்யா ரொம்ப ஜாலி டைப். ஷூட்டிங்ஸ்பாட்டில் எப்பொழுதுமே ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். சயீஷா அப்படியே நேர் எதிரானவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பவர். அவர்களுக்கு இடையே எப்படி காதல் ஏற்பட்டது என்று சில திரையுலக பிரபலங்களே வியந்துள்ளனர்.

தற்போது  அவர்கள் தேனிலவுக்கு சென்ற புகைப்படத்தை முன்னதாக தேனிலவுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யா விசாகனை நெட்டிசன்கள் விளாசினார்கள். நல்ல வேளை சயீஷாவை யாரும் திட்டவில்லை.