தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல் ஆரம்பமானதிலிருந்து இன்று வரை புதிதாய் வரும் தொகுப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருபவர் தொகுப்பாளின் அர்ச்சனா.பல முன்னனி தொகுப்பாளிகளே இவரிடம் பேச கொஞ்சம் அச்சப்பட தான் செய்வர். காரணம் எதையாவது கூறி சட்டென்று வாயை அடைத்து விடுவார்.அப்படியிருக்கையில், இம்மாதம் கடைசி திகதிகளில் பிரபல தொலைக்காட்சியில் தொடங்க இருக்கும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ’சூப்பர் மாம்’ என்ர நிகழ்ச்சியை அம்மாவும் மகளும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
அதாவது, அர்ச்சனாவும், ஆறாம் வகுப்பு படிக்கும் அவரது மகளான சாராவும், தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.இது குறித்து தொகுப்பாளினி கூறியதாவது, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’னு சொல்வாங்க இல்லையா? அதேதான். அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி ஆங்கரிங் பண்ண வந்திடுச்சு.
அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு யோசிக்கிறப்பவே, ஒருவித பூரிப்பு மனசுக்குள் வந்துடுது. என்னை மாதிரி இல்லைங்க அவ. தாய் எட்டடி பாய்ஞ்சா, இந்தக் குட்டி 16 அடி இல்ல, 32 அடி கூட பாயும். நானே என் மகளைப் பத்தி இதுக்கு மேல சொல்லக் கூடாது..
உங்க எல்லோரையும்போல அவளோட ஆங்கரிங்கைப் பார்க்க நானும் ஆவலோட வெயிட்டிங் என்று கூறியுள்ளார்.