தொடக்கூடாத இங்களில் கை வைத்தார்: சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி தொலைக்காட்சி பிரபலம்

பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் ஆணாதிக்கத்தால் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை பேசும் ஒன்றாக #MeToo என்ற ஹாஷ்டாக் மூலம் வளம் வருகிறது. அயல்நாடுகளில் ஆரம்பித்த இந்த பகிர்வு தற்போது இந்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து தற்போது பல பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை இந்த ஹஸ்டாகில் பகிர்ந்து வருகிறார்கள்.இதில் ஒருவர் தான் பாடகி சின்மயி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் படி தனது வசீகர குரலால் அனைவரையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் சில நாள்களாக அவர் பகிர்ந்து வரும் விஷயங்கள் தமிழக மக்கள் மத்தியில் அதிர்வலையை உண்டாகியுள்ளது. குறிப்பாக, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக அவர் பகிர்ந்த சில தகவல்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயி, தொடர்ந்து தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவருகிறார்.

பெண் ஒருவர் சன் டிவி, கலைஞர் டிவி போன்ற பெரிய இடங்களில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா என்பவர் பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.அதனை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.அப்பெண் கூறியிருப்பதாவது,

சுட்டி தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்தேன்,அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடங்களில் கை வைத்து, முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்தால் தொகுப்பாளினியாக பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியதாக பதிவு செய்துள்ளார்.