நகைச்சுவை நடிகர் யோகிபாபுவா இது? குழப்பத்தில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளெ

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் புதிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.எமன் போல வேடம் அணிந்துள்ளதால் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.தர்மபிரபு என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் , அது ஒரு நகைச்சுவை படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள்.

இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.இந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும்.அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு.

இப்படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் பாலசந்தர் அரங்க அமைப்பிற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.